நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு, NEET,

நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு

Bright Zoom,


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.




நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு, NEET, நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு, NEET, Reviewed by Bright Zoom on May 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.