அன்னிபெசண்ட் | Anniphesant

 அன்னிபெசண்ட் 

Anniphesant  

TNPSC - இந்திய வரலாறு

Bright Zoom,


அன்னிபெசண்ட்

◆ பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றியவர் 

- அன்னிபெசண்ட்

◆ 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர்

- அன்னிபெசண்ட்.

◆ பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர்

 - அன்னிபெசண்ட்

◆ 1916ஆம் ஆண்டு பனாரஸ் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் 

- பண்டித மதன் மோகன் மாளவியா.

◆ 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின் உலக அளவிலான தலைவராக பதவி வகித்தவர் 

- அன்னிபெசண்ட்.

◆ பிரம்ம ஞான சபையின் தலைமையகம் 

- சென்னை அடையாறு.

◆ அன்னிபெசண்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள் 

- ஜம்னா தாஸ், துவாரகா தாஸ், ஜார்ஜ் அருண்டேல், ஷங்கர் லால் பன்கர், இந்துலால் யக்னிக், சி.பி. இராமசாமி, பி.பி. வாடியா.


◆ துருக்கி சுல்தான் முதல் உலகப் போரில் நுழைந்ததை அடுத்து முஸ்லீம் லீக்கை பிரிட்டிஷார் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர்.

◆ அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தில் அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்த போது தீவிரப் பங்காற்றினார்.

◆ 1914ல் தி காமன் வீல் என்ற வாரந்திரியை தொடங்கியவர்

 -அன்னிபெசண்ட்.

◆ அன்னிபெசண்ட் தொடங்கிய தி காமன் வீல் வாராந்திரி சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

◆ 1915 "How India Wrought for Freedom" தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தவர்- அன்னிபெசண்ட்

◆ அன்னிபெசண்ட் கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் How India Wrought for Freedom புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.


◆ ஜூலை14, 1915ல்  நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கியவர் - அன்னிபெசண்ட்


◆“தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்ட வர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்" என அன்னிபெசண்ட் கூறினார்.

◆ "இங்கிலாந்தின் கடினமான தருணம் இந்தியாவின் வாய்ப்புக்கான தருணம்" என்று முழக்கமிட்டவர்- அன்னிபெசண்ட்.

◆செப்டம்பர் 28, 1915ல் அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை துவக்கப் போவதாக அன்னிபெசண்ட் முறைப்படி அறிவித்தார்.

◆1916ல் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன, ஆரம்பித்தவர்கள் - திலகர், அன்னிபெசண்ட்.

◆ தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள் - அன்னிபெசண்ட் தன்னாட்சி இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

◆ அன்னிபெசண்ட் தொடங்கிய பத்திரிக்கைகளும் கல்லூரிகளும்

● தி காமன் வீல் 1914

● நியூ இந்தியா ஜூலை 14, 1915

◆ How India Wrought for Freedom - 

1915

◆ இந்துப் பல்கலைக்கழகம்- 1916

◆ பிரம்ம ஞான சபை - ஆல்காட்

◆ மத்திய இந்துக் கல்லூரி - அன்னிபெசண்ட் 

◆ மத்திய இந்துக் கல்லூரி - அன்னிபெசண்ட்

◆ இந்துப் பல்கலைக்கழகம் மாளவியா மதன் மோகன்

◆ அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்தபோது தீவிரமாக பங்காற்றிய இயக்கங்கள்


◆ அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்


◆ ஃபேபியன் சோஷலிசவாதிகள் இயக்கம்


◆ குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கம்


அன்னிபெசண்ட் | Anniphesant அன்னிபெசண்ட் | Anniphesant Reviewed by Bright Zoom on July 01, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.