உலக வரலாற்றில் இன்று
( World History Today - 01-06-2018)
உலக பெற்றோர் தினம்..!!
இன்று உயிர் கொடுத்தவர்களை போற்றும் தினம்..!
பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர்களின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினம்
உலகில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா.சபை ஜூன் 1ஆம் தேதியை இத்தினத்தை பிரகடனம் செய்தது.
உலக பால் தினம்...!!
உலக பால் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
பால் உற்பத்தியை பெருக்குதல், பால் உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துதல் தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மர்லின் மன்றோ
அமரநட்சத்திரம், ஹாலிவுட்டின் ராணி மர்லின் மன்றோ 1926ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன்.
இவருக்கு 1950-ல் வெளிவந்த தி அஸ்பால்ட் ஜங்கிள், டு நாட் பாதர் டு நாக் படங்கள் புகழை தேடித் தந்தன. இவர் கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
ஒரு நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குநர் என பன்முகத்திறன் கொண்ட இவர் 36வது வயதில் (1962) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்...!!
193 – ரோமப் பேரரசர் டிடியஸ் ஜூலியானஸ் படுகொலை செய்யப்பட்டார்.
1215 – மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரைக் கைப்பாற்றினான்.
1485 – ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைபபற்றினான்.
1533 – ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1605 – மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
1792 – கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1812 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.
1831 – ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
1855 – அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
1869 – மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
1879 – பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
1910 – ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.
1941 – ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1947 – சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
1959 – நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
1962 – நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1964 – சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிக சிறப்புமிக்க பெண்மணியான ஹெலன் கெல்லர் மறைந்தார்.
1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1975ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியுமான கர்ணம் மல்லேஸ்வரி ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பிறந்தார்.
1978 – டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
1980 – சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
1981 – தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம்
சஞ்சீவி ரெட்டி மறைந்தார்.
1999ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஹோவர்கிராஃப்ட்டை கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொக்கரல் மறைந்தார்.
பிறப்புகள்
1926 – ஆண்டி கேரிபித், அமெரிக்க நடிகர்
1926 – மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (இ. 1962)
1937 – மோர்கன் ஃபிறீமன், அமெரிக்க நடிகர்
1940 – ரேனே ஆபெர்ஜோநோசிஸ், அமெரிக்க நடிகர்
1947 – ரோன் வூட், அமெரிக்க இசைக் கலைஞர்
1953 – ரோனி டுன், அமெரிக்க இசைக் கலைஞர்
1959 – ஆலன் வல்டேர், பிரித்தானிய இசைக் கலைஞர்
1960 – சைமன் கல்லுப், பிரித்தானிய இசைக் கலைஞர்
1969 – தெரசா போலோ, அமெரிக்க நடிகை
1974 – அலனிஸ் மாரிஸ்சாட், கனேடிய இசைக் கலைஞர்
1974 – மெலிசா சகேமில்லேர், அமெரிக்க நடிகை
1970 – மாதவன், தமிழ் நடிகர்
இறப்புகள்
1968 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (பி. 1880)
1979 – வேர்னர் ஃபோர்ஸ்மன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
1999 – கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1910)
1996 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் (பி. 1913)
2001 – பிரேந்திரா, நேபாள மன்னர் (பி. 1945)
சிறப்பு நாள்
பன்னாட்டு குழந்தைகள் நாள்
சமோவா – விடுதலை நாள் (1962)
துனீசியா – அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)
சூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 153 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.
சிந்தனை துளிகள்..!
வாழ்க்கையில் தோல்விக்கு இரண்டு காரணம், ஒன்று யோசிக்காமல் செய்வது. இரண்டு யோசித்த பின்னும் செய்யாமல் இருப்பது.
வெற்றி இல்லாமல் வாழ்க்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை.
( World History Today - 01-06-2018)
உலக பெற்றோர் தினம்..!!
இன்று உயிர் கொடுத்தவர்களை போற்றும் தினம்..!
உலக பால் தினம்...!!
மர்லின் மன்றோ...!!
முக்கிய நிகழ்வுகள்...!!
பிறப்புகள்...!!
இறப்புகள்...!!
சிறப்பு நாள்...!!
சிந்தனை துளிகள்..!!
உலக வரலாற்றில் இன்று ( World History Today - 01-06-2018)
Reviewed by Bright Zoom
on
June 03, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
June 03, 2018
Rating:



No comments: