வெளிநாட்டில் படித்து சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கானது
For students who want to study and accomplish abroad
இளநிலை படிப்பை முடித்த பின் வெளிநாட்டில் உயர்கல்வியினை தொடர விரும்பும் மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பது அவசியமாகும்.
அமெரிக்கா
உயர்கல்விக்காக பெரும்பாலான மாணவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது அமெரிக்காதான். தரமான கல்வி வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.
அதுமட்டுமல்லாது பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் பெல்லோஷிப் போன்றவற்றினை வழங்குகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள்: கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில், எம்.எஸ்., படிப்பை முடிக்கும், மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறுவது உறுதி.
இங்கிலாந்து
குறுகிய காலத்தில் மாணவர்கள் எளிதாக படிப்பினை முடிக்கும் வண்ணம் அட்டவணைகளை உருவாக்கி தரமான கல்வி வழங்கப்படுகிறது.
இந்நாட்டின் அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பல்வேறு கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் குறைந்த அளவு கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம், வசிப்பிட கட்டணம் கிடைக்கும்.
சேல்போர்ட் பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், பர்மிங்காம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலை கழகங்களாகும்.
அவுஸ்திரேலியா
படிப்பதற்கு ஏதுவான சூழல், குறைந்த கல்வி கட்டணம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் அதிக அவுஸ்திரேலியாவினை தங்கள் உயர் படிப்பிற்காக தேர்வு செய்கின்றனர்.
அடிலெய்டு பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம் மற்றும் கான்பரா பல்கலைக்கழகம் போன்றவை இங்குள்ள சிறந்த பல்கலை கழகங்களாகும். இங்கு மாணவர்கள் இறுதி ஆண்டினை பயிலும் போதே வேலை வாய்ப்பினை பெறுகின்றனர்.
ஜெர்மனி
உயர் தொழில்நுட்பம், தூய்மையான சுற்றுச்சூழல், தரமான கல்வித்திட்டம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இந்நாடானது தொழில்நுட்பகல்வி பயில நினைபோர்க்கு ஏற்ற இடமாகும்.
இலவச கல்வியினை பெற நினைக்கும் மாணவர்கள் ஜெர்மன் மொழியினை கற்று இருப்பது அவசியமாகும்.
பேரியுத் பல்கலைக்கழகம், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பிரன்சுவிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ட்ரெஸ்டிந் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்றவை இங்குள்ள சிறந்த பல்கலைகழகங்களாகும்.
கனடா
கனடாவிலுள்ள பல்கலைகழகங்கள் உலக தரம் வாய்ந்த கல்வியினை தரவல்லவை. ஆனால் இங்கு அதிக தொகையினை செலவிட வேண்டிவரும் என்பதால் கவனத்துடன் பல்கலை கழகங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.
பட்டப்படிப்பை முடித்தவுடன் கனடாவில் வேலை பெறுவது கடினம், இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ரொரன்ரோ பல்கலைக்கழகம்,
ஒட்டாவா பல்கலைக்கழகம்,
ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம்,
விண்ட்சர் பல்கலைக்கழகம்
மற்றும் மேற்கத்திய பல்கலைக்கழகம் போன்றவை சிறந்த பல்கலைகழகங்களாகும்.
பிரான்ஸ்
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. தரமான ஆய்வக கட்டமைப்பு வசதி, குறைந்த செலவில் உயர் கல்வியை படிக்கும் வாய்ப்பு, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை என அனைத்திலும் சிறப்பாய் செயல்படுகின்றன பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்.
ஈகோலி நார்மல் சுப்பீரியர் பாரிஸ்-தென் பல்கலைக்கழகம், பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம், பாரிஸ் டெக்கார்ட் பல்கலைக்கழகம், எக்ஸ் மார்ஸைல் பல்கலைக்கழகம் ஆகியவை அங்குள்ள சிறந்த பல்கலை கழகங்களாகும்.
பிரான்ஸ்
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. தரமான ஆய்வக கட்டமைப்பு வசதி, குறைந்த செலவில் உயர் கல்வியை படிக்கும் வாய்ப்பு, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை என அனைத்திலும் சிறப்பாய் செயல்படுகின்றன பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள்.
ஈகோலி நார்மல் சுப்பீரியர் பாரிஸ்-தென் பல்கலைக்கழகம், பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம், பாரிஸ் டெக்கார்ட் பல்கலைக்கழகம், எக்ஸ் மார்ஸைல் பல்கலைக்கழகம் ஆகியவை அங்குள்ள சிறந்த பல்கலை கழகங்களாகும்.
வெளிநாட்டில் படித்து சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கானது
Reviewed by Bright Zoom
on
July 25, 2022
Rating:

No comments: