பொது அறிவு - அறிவியல் - இயற்பியல் அளவீடுகள்


பொது அறிவு - அறிவியல் - இயற்பியல் அளவீடுகள்

1. வெர்னியர் அளவுகோலை வடிவமைத்தவர் - பியரி வெர்னியர்

2. கம்பியின் தடிமன், தாளின் தடிமனை அளக்கப் பயன்படுவது எது? - திருகளவி

3. திருகளவியின் மீச்சிற்றளவு - 0.01 மி.மீ

4. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு - 0.1 மி.மீ

5. ஆய்வகங்களில் பொருளின் நிறையை மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக அளக்க பயன்படுவது - இயற்பியல் தராசு.

6. இயற்பியல் தராசின் கத்தி விளிம்புகள் ................... ஆல் ஆனது. - அகேட்டுகள்

7. பொருட்களின் எடைகளை வேகமாகவும், துல்லியமாகவும் அளவிடப் பயன்படும் கருவி எது? - டிஜிட்டல் தராசு (அ) எண்ணிலக்க தராசு

8. டிஜிட்டல் தராசு ................. தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. - திரிபு அளவி

9. பளுத்தூக்கியினால் உயர்த்தப்படும் மிக அதிக பளுவான பொருட்களின் எடைகளை ...................... பயன்படுத்தி அளவிடப்படுகிறது. - நீர்மவியல் விசைகளை

10. பழங்காலத்தில் நேரத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட கடிகாரங்கள் - 1. சு+ரிய கடிகாரம், 2. நீர் கடிகாரம், 3. மணல் கடிகாரம்

11. பிசோ அழுத்த மின் விளைவு .................. கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. - குவார்ட்ஸ் கடிகாரம்

12. ஊசல் கடிகாரத்தை வடிவமைக்க திட்டமிட்டவர் - கலீலியோ

13. ஊசல் கடிகாரத்தை வடிவமைத்தவர் - கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்

14. குவார்ட்ஸ் படிகங்கள் ............... அதிர்வெண்ணில் அதிர்வுற கூடியவை. - உயர்

15. ஊசல் கடிகாரத்தில் நீளம் அதிகரிக்க அலைவு நேரம் ................. - அதிகரிக்கும்





பொது அறிவு - அறிவியல் - ஆற்றல் பற்றிய முக்கிய வினாக்கள்

1. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்

2. ஆற்றலின் அலகு என்ன? - ஜூல்.

3. அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது? - நிலையாற்றல்

4. நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது? - இயக்க ஆற்றல்

5. வேதிப்பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள வேதிப்பிணைப்புகளில், சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் எவ்வகை ஆற்றல் - வேதி ஆற்றல்

6. மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை எரிக்கப்படும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது ................ ஆற்றலாகும். - வேதி

7. மின்கலன்களில் உள்ள .................. ஆற்றல் மின்னாற்றலைத் தருகிறது. - வேதி

8. எரிபொருள்களில் உள்ள வேதியாற்றல் ............... மற்றும் ................ ஆற்றலாக மாற்றப்படுகிறது. - வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல்

9. வெப்ப ஆற்றலின் முதன்மையான மூலம் .............. - சூரியன்.

10. விறகு மற்றும் எரிவாயுவில் சேமிக்கப்பட்டுள்ள ....................... வெப்ப ஆற்றலாக மாறிக் கிடைக்கிறது. - வேதி ஆற்றல்

11. செயற்கைக்கோள்களிலும், கைகடிகாரங்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் .................... பயன்படுகின்றன. - சூரிய மின்கலன்கள்

12. தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள் - கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்

13. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தவர்? - ஆர்க்கிமிடிஸ்

14. ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ........................ ஆற்றலாகச் சேமித்து வைக்கின்றன. - வேதி

15. எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திலும், மொத்த ஆற்றலின் அளவு எவ்வாறு இருக்கும். - மாறாமல்




பொது அறிவு - அறிவியல் - இயற்பியல் அளவீடுகள்    பொது அறிவு - அறிவியல் - இயற்பியல் அளவீடுகள் Reviewed by Bright Zoom on June 16, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.