TNPSC CCSE-4 Exam 2019 : இன்னா நாற்பது தொடர்பான செய்திகள்...!

TNPSC CCSE-4 Exam 2019 :
இன்னா நாற்பது தொடர்பான செய்திகள்...!

Bright Zoom

GK Tamil

இன்னா நாற்பது தொடர்பான செய்திகள்

🏵 இந்நூலின் ஆசிரியர் கபிலர்.

🏵 இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

🏵 இது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியாகும்.

🏵 உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

🏵 இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

🏵 இந்நூலில் 40 இன்னிசை வெண்பாக்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

🏵 ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா" என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது" எனப் பெயர்பெற்றது.

🏵 கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால்வர் பற்றியும் குறிப்பிடுகிறார்.

🏵 இந்நூலில் 164 இன்னா செயல்கள் பற்றித் தெரிவித்துள்ளன.

சிறப்புத் தொடர்கள் :

🏵 உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா.

🏵 ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா.

🏵 தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா.

🏵 இன்னா பொருள் இல்லார் வண்மை பிரிவு.

🏵 திருவுடையாரைச் செறல் இன்னா.

🏵 குழவிகள் உற்றபிணி இன்னா.

🏵 இன்னா ஈன்றாளை ஓம்பாவிடல்.




TNPSC CCSE-4 Exam 2019 : இன்னா நாற்பது தொடர்பான செய்திகள்...! TNPSC CCSE-4 Exam 2019 :   இன்னா நாற்பது தொடர்பான செய்திகள்...! Reviewed by Bright Zoom on June 20, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.