தொழில் வளர்ச்சி Bright Zoom TNPSC Tamil

 Bright Zoom TNPSC Tamil

தொழில் வளர்ச்சி

🌺 ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அந்நாட்டின் தொழில் முன்னேற்ற அளவை பொருத்ததாகும்.

🌺 மேற்க்கத்திய நாடுகள் அவற்றினுடைய தொழில் துறை வளர்ச்சியினாலேயே உயர்ந்த பொருளாதார முன்னேற்ற நிலையை எய்தியுள்ளது.

🌺 பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்துவதற்க்கு தொழில் மயமாக்குதல் மிகவும் இன்றியமைவதாகும்.

🌺 உரத்தொழிற்சாலை, கப்பல் தளம், இரயில் பெட்டி தொழிற்சாலை, தொலைபேசித் தொழிற்சாலை ஆகியவை முதல் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள் ஆகும்.

🌺 தொழில் மயமாக்கலின் வேகத்தை முடுக்கிவிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிறு தொழில்களைக் கொண்ட அறுபது தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கியது.

🌺 மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் ஏறக்குறைய நாட்டின் பல்வேறு தொழில் முன்னேற்றத்துக்காக ரூ 300 கோடியை அரசு ஒதுக்கியது. பொதுத்துறை ஒதுக்கீடு ரூ 1300 கோடியாக இருந்தது.

🌺 இரும்பு எஃகு தொழில் மற்ற அனைத்து தொழில்களின் முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைவதால் இதனைத் தாயகத் தொழில் என்றழைப்பர்.

🌺 1973 ஆம் ஆண்டு இந்திய இரும்பு ஆணையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தியது.

🌺 1991 ஆம் ஆண்டு ஜூலையில் புதிய தொழிற்கொள்கையை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக எல்லா வகையான விலைக் கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றியது.

🌺 நாட்டின் மிகப்பழமையான பெரிய தொழில்களுள் பருத்தி நெசவுத் தொழிலும் ஒன்றாகும்.

🌺 உலகில் பருத்தியாடை வணிகத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

🌺 இந்திய அரசு தனது முதலாவது தொழிற்கொள்கையை 1948 ம் ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டது.

🌺 தொழில் உரிமைக் கொள்கை ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டு அதன்படி 1970 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்ளை ஒன்றை அரசு அறிவித்தது.

🌺 இந்தியாவில் குறிப்பிட்டத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டமையால் 1948 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கைக்குப் பின்பு, இரண்டாவது தொழிற்கொள்கை 1956 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது.




தொழில் வளர்ச்சி Bright Zoom TNPSC Tamil தொழில் வளர்ச்சி Bright Zoom TNPSC Tamil Reviewed by Bright Zoom on July 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.