TNPSC - பொது அறிவு தாவரவியல் தாவரங்களின் உணவூட்டம்



 TNPSC - பொது அறிவு

தாவரவியல்

தாவரங்களின் உணவூட்டம்

Bright Zoom Tami

🌟 உயிரினங்கள் ஊட்டப்பொருள்களைத் தங்கள் உடலுக்குள் ஏற்றுக் கொள்வது உணவு+ட்டம் எனப்படும். உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டப்பொருள்கள் அனைத்தும் அவை எடுத்துக்கொண்ட உணவு மூலமே கிடைக்கின்றன.

🌟 உணவு எடுத்துக் கொள்ளும் முறைகளில் உயிரினங்கள் வேறுபடுகின்றன. இருவகையான ஊட்ட முறைகள் பொதுவாக உள்ளன.

(i) தற்சார்பு ஊட்ட முறை

(ii) பிறசார்பு ஊட்ட முறை

(i) தற்சார்பு ஊட்ட முறை :

🌟 தற்சார்பு ஊட்ட முறையில், தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கிறது. தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் தாவரங்கள் தற்சார்பு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

🌟 இவை கரியமில வாயு மற்றும் நீரை ஆற்றல் உதவியால் பல்வேறு கரிமப் பொருள்களாக மாற்றுகின்றன. கரியமில வாயுவை கரிமக்கூட்டுப் பொருள்களாக மாற்றுவதற்குத் தாவரங்கள் எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்து இவை, ஒளித்தற்சார்பு உயிரிகள், வேதித்தற்சார்பு உயிரிகள் என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

(ii) பிறசார்பு ஊட்ட முறை :

🌟 சில உயிரினங்களால் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே தயாரிக்க முடிவதில்லை. இவை தங்கள் உணவுக்காக மற்ற உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துள்ளன. தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாத உயிரிகள் பிறசார்பு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

🌟 பிறசார்பு ஊட்ட முறை இருவகைப்படும்.

1. சாறுண்ணி வகை ஊட்ட முறை

2. ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை

1) சாறுண்ணி(மட்குண்ணி) வகை ஊட்ட முறை :

🌟 இறந்த அல்லது உயிரற்ற கரிமக் கூட்டுப்பொருள்களிலிருந்து உணவைப் பெறும் தாவரங்கள் சாறுண்ணித் தாவரங்கள் எனப்படும்.

எ.கா. மியூனக்கர், (பூபசை), பேசில்லஸ் சப்டிலிஸ் (பாக்டீரியா) மானோட்ரோபா (ஆஞ்சியோஸ்பெர்ம்).

2) ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை :

🌟 ஒட்டுண்ணி உணவு+ட்ட முறையில் ஓர் உயிரினம் தனக்குத் தேவையான உணவை மற்ற உயிரியின் (ஓம்புயிரி) உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது. இத்தகைய தாவரங்கள் ஒட்டுண்ணித் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.

🌟 ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியைத் துளைத்து, உணவு, நீர், கனிமங்களை உறிஞ்சுவதற்குச் சில சிறப்பான அமைப்புகளைப் பெற்றுள்ளன. இந்த அமைப்புகளுக்கு 'ஹாஸ்டோரியாக்கள்" (உறிஞ்சு உறுப்புகள்) என்று பெயர்.
எ.கா. சாந்தோமோனாஸ் சிட்ரி (பாக்டீரியா) செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா (பபூஞ்சை) கஸ்குட்டா (ஆஞ்சியோஸ்பெர்ம்)

கூட்டுயிரி உணவூஉணவ முறை

🌟 இவ்வகை ஊட்டமுறையில் இரண்டு வேறுபட்ட உயிரினங்கள் சேர்ந்து வாழ்கின்றன. இவை ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது, இவை ஊட்டப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

🌟 இத்தகைய உணவூட்ட முறை கூட்டுயிரி ஊட்ட முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்களுக்குக் கூட்டுயிரிகள் என்று பெயர்.
எ.கா. லைக்கன், மைக்கோரைசா, ரைசோபியம்.


TNPSC - பொது அறிவு தாவரவியல் தாவரங்களின் உணவூட்டம்   TNPSC - பொது அறிவு     தாவரவியல்    தாவரங்களின் உணவூட்டம் Reviewed by Bright Zoom on August 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.