TNPSC பொது அறிவு - அறிவியல்
- மனித எலும்புக் கூடு
Bright Zoom GK
எலும்புக்கூடு:
மனிதனின் அசைவுகளான நடப்பது, ஓடுவது போன்ற பல விதமான அசைவுகளுக்கும் எலும்புக்கூடானது ஒரு கருவி போன்று செயல்படுகிறது.
மனித எலும்புக் கூடு
அச்சுச் சட்டகம்
மண்டையோடு
முதுகெலும்பு
மார்புக்கூடும் மார்பெலும்புகளும்
இணையுறுப்புச் சட்டகம்
⭐ தோள்வளையம், மேல் பக்க உறுப்பு எலும்புகள்
⭐ இடுப்பு வளையம், கீழ்பக்க உறுப்பு எலும்புகள்
⭐ மனித எலும்புக்கூட்டில் உள்ள
எலும்புகளின் எண்ணிக்கை 206 ஆகும்.
⭐ இவைகள் அச்சுச் சட்டகம், இணையுறுப்புச் சட்டகம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அச்சுச் சட்டகம்:
முதுகெலும்பானது வளைந்த தனி சிறப்பான அமைப்பினைப் பெற்றுள்ளது.
இவை 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவைகள் பின்வருமாறு,
1. கழுத்துப்பகுதி - இப்பகுதியில் 7 முள்ளெலும்புகள் உள்ளது.
2. மார்புப்பகுதி - இப்பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளது.
3. வயிற்றுப்பகுதி - இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளது.
4. திருகெலும்பு (இடுப்புப் பகுதி) - இப்பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளது.
5. வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு) இதில் 4 முள்ளெலும்புகள் உள்ளது.
மார்புக்கூடும் மார்பெலும்புகளும்:
இது நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளை மூடிப் பாதுகாக்கிறது. இதில் 12 இணை (24) விலா எலும்புகள் உள்ளது.
விலா எலும்புகளும், மார்பெலும்புகளும், முதுகெலும்பும் இணைந்து மார்புக் கூடாக உள்ளது.
இதில் முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்பெலும்புடன் இணைந்திருக்கிறது. இவை உண்மை விலா எலும்புகள் எனப்படும்.
இதனை அடுத்துள்ள 3 இணை விலா எலும்புகள் மார்பெலும்புடன் நேரிடையாக இணைக்கப்படவில்லை. இவை பொய்விலா எலும்புகள் எனப்படும்.
இறுதியில் உள்ள இரண்டு 11, 12 ஆவது இணை விலா எலும்புகள் சிறியதாகவும், மார்பெலும்புடன் இணையாததாகவும் இருக்கும், இந்த இணையாத விலா எலும்புகள், மிதக்கும் விலா எலும்புகள் எனப்படும்.
சட்டகத்தின் வேலைகள்:
தாங்குதல்:
இது உடலைத் தாங்கி வடிவத்தினைக் கொடுக்கிறது.
பாதுகாத்தல்:
இதயம், மூளை, நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
இயக்கம்:
இயக்கத்தில் நெம்புகோல் போன்று செயல்பட்டு, அசைவுகளுக்கு உதவுகிறது.
சேமிக்கும் தாது உப்புகள்:
கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் போன்ற சில தாது உப்புகளைச் சேமித்து வைக்கிறது.
இரத்த செல்களின் உற்பத்தி:
எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள், இரத்தத் தட்டுகள் உற்பத்தி செய்கிறது.
நம் உடலில் உள்ள மிக நீளமான எலும்பு, தொடை எலும்பு ஆகும். சராசரி மனித உடலில், இதன் நீளம் சுமார் 45 செ.மீ ஆகும்.
நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு, உள் காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.

TNPSC பொது அறிவு - அறிவியல் - மனித எலும்புக் கூடு
Reviewed by Bright Zoom
on
August 30, 2019
Rating:

No comments: