TNPSC அடுத்தது வர இருக்கும் தேர்வு என்ன?

TNPSC அடுத்தது வர இருக்கும் தேர்வு என்ன?

Bright Zoom

பல சுவாரஸ்ய தகவல்கள்!!!!!

💐அடுத்து என்ன தேர்வுகள் நடக்க உள்ளது, எப்போது, எதை படிக்க வேண்டும் என்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்!!

💐அரசு பணியினை பெற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள், அதற்கான சரியான திட்டமிடலை முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும்.

💐நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது போட்டித் தேர்வைப் பற்றிய புரிதல்...!

💐டின்.என்.பி.எஸ்.சி, தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அனைத்து காலிப்பணியிடங்களை பற்றிய முழு தகவல்களையும் முதலில் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற் போல தயாராவது நல்லது.

💐மொழியறிவும், கல்வித்தகுதிக்கும் ஏற்ப போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் உள்ள தேர்வு நுணுக்கங்கள் தெரிந்தால் போதும், வெற்றி பெறுவது எளிது.

💐தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கும் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

💐அதற்குப் பிறகு, பொது அறிவு மற்றும் அடிப்படை கணித அறிவு முக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவாக கருதப்படுகிறது.

💐பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

💐இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.

💐மேலும், இன்னும் இந்த வருடத்தில் பல தேர்வுகள் வரவிருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு, உங்களது வெற்றியினை உறுதிப்படுத்துங்கள்.

💐 TNPSC ல் வெளியிடப்பட்ட 2019 ஆண்டு அறிக்கையின் பல தேர்வுகள் நடைபெற உள்ளது.

💐அது மட்டுமில்லாமல், குரூப் 2 தேர்வுக்கான( non interview) காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக பல இணையதளங்களில் வருகின்ற செய்தியையும் பார்க்கிறோம்.

💐அதனால் அரசாங்க பணி என்ற உங்களது கனவினை நனவாக்கும் முயற்சியினை இன்றே தொடங்குங்கள்!!!



TNPSC அடுத்தது வர இருக்கும் தேர்வு என்ன? TNPSC அடுத்தது வர இருக்கும் தேர்வு என்ன? Reviewed by Bright Zoom on September 03, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.