Bright Zoom Today News
ஜூன் 03 காலை நேரச் செய்திகள்
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ராணுவத்தை களமிறக்க போவதாக டிரம்ப் எச்சரிக்கை :
அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் 6 காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க போவதாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
கரையை கடக்கிறது நிசர்கா புயல் :
அரபிக் கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான நிசர்கா இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியில் மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமானங்கள், ரயில்கள் ரத்து :
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், மும்பையில் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குருவாயூர் கோவிலில் திருமணத்திற்கு அனுமதி :
கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் நாளை (4ஆம் தேதி) முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
வாரத்தின் 6 நாட்களும் செயல்படும் :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் செயல்படும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
முதல்வர் கடிதம் மூலம் அழைப்பு :
விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு கடிதம் எழுதியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கனமழை பெய்ய வாய்ப்பு :
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலர் தூவி மரியாதை :
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு :
சென்னையில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் தவிர தேவையில்லாமல் வாகனங்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்கவே இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை :
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பார்முலா1 கார்பந்தய ஆட்டம் :
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது சுற்றாக ஆஸ்திரியா கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 5ஆம் தேதி அரங்கேறுகிறது.

Bright Zoom Today News ஜூன் 03 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 03, 2020
Rating:

No comments: