Bright Zoom Today News ஜூன் 09 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜூன் 09 மாலை நேரச் செய்திகள்


தமிழகத்தில் நாளை முதல்... தனியார் பேருந்துகள் இயங்கும்... முக்கியச் செய்திகள்...!!

உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் கடும் கண்டனம்:

மகாத்மா காந்தியின் சிலையை அமெரிக்காவில் அவமதித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலச் செய்திகள்
10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து:

10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா, தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டரை மாதங்களுக்குப் பின்:

கேரளாவில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் நாளை முதல்:

சென்னை, திருவள்ள ர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில்:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு ரயில்:

தமிழகத்தில் ஜூன் 12-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜூன் 10) காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
புதிய எண் அறிமுகம்:

சென்னையில் அவசர கால அழைப்புகளுக்கு 044-40067108 என்ற புதிய எண்ணை சுகாதாரத்துறை அறிமுகம் செய்தது. 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதால் 108 ஆம்புலன்ஸ் சேவையை எந்த காலதாமதமும் இன்றி பெறலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
நான்கு ஆண்டுகள் தடை:

இந்தியாவின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதிக்கு ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.



Bright Zoom Today News ஜூன் 09 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜூன் 09 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 09, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.