BrightZoom TodayNews
ஜுன் 10 காலை நேரச் செய்திகள்
ஜுன் 10 காலை நேரச் செய்திகள்
நொறுக்குத்தீனி பாக்கெட்களுக்கு தடை... தமிழக அரசு அதிரடி உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
இந்த ஆண்டு ரத்து:
ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
தமிழக அரசு உத்தரவு:
கடைகளில் நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல்:
சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இந்திய பார் கவுன்சில் உத்தரவு:
3 மற்றும் 5ஆம் ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைனில் எழுத அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை:
மோட்டார் வாகன ஆவணங்களின் காலக்கெடு, செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவிப்பு:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கல்லூரிகளில் பருவ தேர்வுகள் ரத்து:
புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டின் இறுதி பருவம் (செமஸ்டர்) பயிலும் மாணவர்களை தவிர மற்ற முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது, என மத்திய பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் லாசர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் பங்கேற்பு:
மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.
வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது:
வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒடிசாவில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என டிஆர்டிஏ திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
கடன் பெற விண்ணப்பிக்கலாம்:
நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழிலுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
இந்திய அணி முதல் 10 இடத்தைப் பிடிக்கும்:
2028 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி. மீண்டும் இன்று ஆலோசனை:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுமா? என்பது குறித்து ஐ.சி.சி. மீண்டும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
ஆகஸ்டு 1ஆம் தேதி:
இந்தியாவில் உள்;ர் கால்பந்து போட்டி ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BrightZoom TodayNews ஜுன் 10 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 10, 2020
Rating:

No comments: