Bright Zoom Today News
ஜுன் 23 காலை நேரச் செய்திகள்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்... நாளை காலை தமிழக முதல்வர் ஆலோசனை - செய்திகள் !
உலகச் செய்திகள்
7 ஆண்டுக்கு பிறகுதான் குடியுரிமை:
நேபாள நாட்டு ஆடவரை அயல்நாட்டு பெண் திருமணம் செய்து கொண்டால், அந்த அயல்நாட்டு பெண்ணுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகே குடியுரிமை வழங்கப்படும் சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி பொதுத்தேர்தல்:
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் செப்டம்பர் 6ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
நாளை காலை 10 மணிக்கு:
தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொளி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக அரசு உத்தரவு:
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு:
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வரன்முறை படுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல்முறை:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக வானிலை எச்சரிக்கைகளை பெற கேரள அரசு, மூன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜூன் 26ஆம் தேதி பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு:
உலகம் முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏதுவாக ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதி:
தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் நன்கொடை வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இன்று நேரில் ஆய்வு:
சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய ராணுவ தளபதி இன்று நேரில் ஆய்வு நடத்த உள்ளார்.
மாவட்டச் செய்திகள்
இன்று முதல் ரத்து:
சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் இன்று (ஜூன் 23) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
தமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும்:
தமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Bright Zoom Today News ஜுன் 23 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 23, 2020
Rating:

No comments: