Bright Zoom Today News
ஜுலை 29 காலை நேரச் செய்திகள்
மாவட்ட ஆட்சியர்களுடன்... முதலமைச்சர் இன்று ஆலோசனை... - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவிப்பு:
சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரை ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக:
சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனத் தூதரகம் தெரிவிப்பு:
சீன செயலிகளுக்கு தடை விதித்த விவகாரத்தில் இந்தியா தவறிழைத்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வீடுகள் விற்பனை 79 சதவீதம் சரிவு:
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் தாக்கத்தால் முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 79 சதவீதம் சரிவடைந்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி காட்சியின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
பெங்க;ரு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்:
ஆன்லைனில் மாணவ-மாணவிகள் பாடம் கற்க வசதியாக ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, கையடக்க கணினி வழங்குவது என நேற்று நடைபெற்ற பெங்க;ரு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது.
144 தடை உத்தரவு:
ரபேல் விமானங்கள் இன்று வருவதை முன்னிட்டு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:
மராட்டியத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மதியம் 1 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவை மாணவர்கள் கல்வி வாரிய இணையதள பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை:
தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.10 கன அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு:
வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பயிற்சியாளர் விருதிற்கு தேர்வு:
லிவர்பூல் அணி முதல் முறையாக இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து கோப்பையை கைப்பற்றக் காரணமான பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப் சிறந்த பயிற்சியாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Bright Zoom Today News ஜுலை 29 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
July 29, 2020
Rating:
No comments: