Bright Zoom Today News ஜுலை 04 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 04 மாலை நேரச் செய்திகள்


இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு:

இந்தியாவுடனான பிரச்சனையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

மாநிலச் செய்திகள்
விற்பனை இல்லை:

தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் நாளை முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கவுள்ளதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊயு தேர்வு ரத்து:

இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த சிஏ தேர்வு பொதுமுடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த தேர்வு ஜூலை 29ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை இறுதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.

வரும் 6ஆம் தேதி முதல்:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத்திற்கு விமானங்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 6ஆம் தேதி முதல் திறக்கப்படும்:

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் கொண்ட அனைத்து நினைவிடங்களும் ஜுலை 6ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

நாய் இறைச்சி விற்பனைக்கு தடை:

நாகாலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி:

ஜூம் செயலிக்கு போட்டியாக ஜியோமீட் என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மாவட்டச் செய்திகள்
புதிய மருத்துவக் கல்லூரி:

கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

3 மாதங்களுக்கு ஒரு முறை:

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை ஆய்வு:

சிவகங்கை திருபுவனத்தில் கீழடி அகழாய்வு பணியில் 4 வகையான எடைக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 7 நாட்களுக்கு:

மதுரையில் வரும் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
சீன வீரர் ஓய்வு:

பேட்மிண்டனில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் லின் டான் ஓய்வு பெற்றார்.



Bright Zoom Today News ஜுலை 04 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 04 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 04, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.