Bright Zoom Today News ஜுலை 06 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 06 காலை நேரச் செய்திகள்


தமிழகம் முழுவதும் தொடரும் தடை... தமிழக அரசு அறிவிப்பு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது:

மேற்கு வங்கத்தின் பெட்ராபோல்-பெனாபோல் எல்லை வழியாக இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான வர்த்தகம் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது.

மாநிலச் செய்திகள்
தமிழகம் முழுவதும் தொடரும் தடைகள் - அரசு அறிவிப்பு:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தாலும் ரயில் போக்குவரத்து, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், பள்ளிக் கல்லூரிகள் இயங்குவதற்கான தடைகள் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

50 சதவீதம் அதிகரிக்க திட்டம்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் விமான எரிபொருள் நிலையங்களை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு:

காற்றின் திசை மாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் சில இடங்களில் இன்று (ஜூலை 6) லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைப்பு:

எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது.

12 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனை:

டெல்லியில் 1000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அவசர சட்டம் பிறப்பிப்பு:

கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஓராண்டுக்கு கட்டாயமாக்கி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று திறப்பு:

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது:

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.

மாவட்டச் செய்திகள்
இன்று முதல்...:

சென்னை, திருவள்;ர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய முழு பொதுமுடக்கம் நேற்று வரை நீடித்தது. இதையடுத்து, இன்று முதல் வாகனப் போக்குவரத்து, கடைகள் திறப்பு ஆகியவற்றில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை:

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடைவிதித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
ஆயுட்கால தடை:

உள்ளூர் போட்டிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்ட கால்பந்து வீரர்கள், அலுவலர்கள், கிளப் உரிமையாளர்கள் என 45 பேருக்கு ஆர்மீனிய கால்பந்து சங்கம் அதிரடியாக ஆயுட்கால தடை விதித்துள்ளது.

சாம்பியன் பட்டம்:

ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிச் அணி பேயர் லெவர்குசன் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் போராடி 20வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

Bright Zoom Today News ஜுலை 06 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 06 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 06, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.