Bright Zoom Today News
ஆகஸ்ட் 18 காலை நேரச் செய்திகள்
தேர்விற்கு தடை விதிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் உத்தரவு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
ஜோ பிடனுக்கு அதிக மக்கள் ஆதரவு:
அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தற்போதைய அதிபர் ட்ரம்பை விட முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று காலை 5.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
மாநிலச் செய்திகள்
நாளை காலை 6 மணி வரை:
புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலான முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது:
வட கர்நாடகத்தில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் நடப்பாண்டு நீட் மற்றும் துநுநு ஆகிய தேர்விற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்:
புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர், கல்வி அமைச்சகம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கால அட்டவணை வெளியீடு:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கால அட்டவணையை றறற.ரிளஉ.பழஎ.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
மாவட்டச் செய்திகள்
மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்:
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணையம் வழியாக பயண அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் உரிய காரணங்களுக்காக மட்டுமே பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
சென்னையில் இன்று மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக அதன் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை தொடங்கியது:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் நேற்று மாணவர் சேர்க்கை தொடங்கியது.
விளையாட்டுச் செய்திகள்
டாப்சீட் ஓபன் டென்னிஸ்:
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஜெனிபர் பிராட் முதல்முறையாக டாப்சீட் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
டோனி விரும்பும் வரை விளையாடலாம்:
டோனி விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
No comments: