Bright Zoom Today News
ஆகஸ்ட் 19 மாலை நேரச் செய்திகள்
தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
மீண்டும் தொடங்கியது:
கொலம்பியாவில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பிற்கு கூடுதல் கொள்முதல் விலையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தலா ரூ.3 லட்சம் நிவாரணம்:
கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தெரிவிப்பு:
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காணொளி மூலம் ஆலோசனை:
தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காணொளி மூலம் இன்று ஆலோசனை நடத்தினர்.
22,000 மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டி:
அசாமில் நடந்த பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மண்டல அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 22,000 மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை:
கொப்பரைத் தேங்காய், ஒரு கிலோவிற்கு 99 ரூபாய் 60 காசு என நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையை 125 ரூபாயாக உயர்த்தி தருமாறு, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு:
வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இ-பாஸ் எளிமையாக்கப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
மதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஆரோன் பிஞ்சின் கடைசி தேதி:
2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையின் இறுதி போட்டிதான் கிரிக்கெட்டில் தன்னுடைய கடைசி தேதி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
No comments: