Bright Zoom Today News
ஆகஸ்ட் 20 மாலை நேரச் செய்திகள்
மாவட்ட ஆட்சியர்களுக்கு... தமிழக அரசு உத்தரவு - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
மாநிலச் செய்திகள்
2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி சேவையின் மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு... தமிழக அரசு உத்தரவு:
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5ஜி தொலைத்தொடர்பு சேவை:
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையை பெற மத்திய அரசிற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப உள்ளன.
மிக தூய்மையான நகரம்:
தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியாவின் மிக தூய்மையான நகரமாக மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இடைவிடாத கனமழை:
டெல்லியில் இடைவிடாத கனமழையை தொடர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
இருமொழி கொள்கை... தமிழக அரசின் கொள்கை முடிவு:
இருமொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு:
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு பிறப்பித்த தடையை நீக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம்:
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செய்யும் பணிகளின் பட்டியலில், மூலிகை செடிகள் வளர்ப்பதையும் ஆயுஷ் அமைச்சகம் சேர்த்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
தங்கம் விலை குறைவு:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனையாகிறது.
170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:
வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 18,000-த்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் பணி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டுச் செய்திகள்
டோனிக்கு பிரதமர் மோடி கடிதம்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட்டிற்கு டோனி ஆற்றியுள்ள பங்களிப்பை மக்கள் என்றும் நினைவுகூறுவர் எனவும், டோனியின் ஓய்வு அறிவிப்பை கேட்டு 130 கோடி மக்களும் ஏமாற்றம் அடைந்ததாகவும் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments: