உலக வரலாற்றில் (28-9-20)இன்று
உலக ரேபிஸ் நோய் தினம்
🌺 ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.
🌺 இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பசுமை நுகர்வோர் தினம்
🌹 பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே செப்டம்பர் 28ஆம் தேதி பசுமை நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.அபினவ் பிந்த்ரா
🍀 இந்திய தொழிலதிபரும், ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான அபினவ் பிந்த்ரா 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள தேராதூன் மாவட்டத்தில் பிறந்தார்.
🍀 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை பெற்றவர்களில் முதல் இந்தியர் ஆவார்.
முக்கிய நிகழ்வுகள்
🌷 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அலெக்சாண்டர் பிளெமிங் பென்சிலினைக் கண்டுபிடித்தார்.
🌷 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்தார்.
No comments: