Bright Zoom Today Newd
செப்டம்பர் 12 முக்கியச் செய்திகள்..!!
7 மாவட்டங்களில் கல்லூரிகளை தொடங்க... தமிழக அரசு அனுமதி -
காலை நேரச் செய்திகள்
உலகச் செய்திகள்
ஜப்பானில் நிலநடுக்கம்:
ஜப்பானில் இன்று காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவாகியுள்ளது.
மாநிலச் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:
இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாளை நீட் தேர்வு:
நாடு முழுவதும் 3,842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது. இதனையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
23 புதிய மசோதாக்கள் அறிமுகம்:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று முதல் சிறப்பு ரயில்கள்:
நாடு முழுவதும் இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை நடத்த தடை:
தமிழகத்தில் 71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தடை விதித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிப்பு:
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதற்கான கால அவகாசம், டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடைமேடைக் கட்டணம் உயர்வு:
பெங்க;ரு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை:
அக்டோபர் 5ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. காலை மற்றும் மதியம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையின் கீழும் வகுப்புகள் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:
8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
அரசு அனுமதி:
அரியலூர், கோவை, கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
20 சதவீதம் கட்டண சலுகை:
சென்னை ஞசு தொழில்நுட்பத்தில் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
பிபா அங்கீகாரம்:
மேட்ச் பிக்சிங் செய்ய பணம் தருவதாக ஆசை காட்டி தரகர்கள் அணுகுவது குறித்து கால்பந்து வீரர்கள் புகார் செய்ய வகை செய்யும் பிரத்யேகமான ஆப்-க்கு சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா அங்கீகாரம் அளித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்:
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments: