Bright Zoom Today News
செப்டம்பர் 11காலை நேரச் செய்திகள்
20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு... தமிழக அரசு அனுமதி - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
5 அம்ச உடன்படிக்கை:
இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்:
அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான 'நார்த்ரோப் க்ரம்மன்" வர்த்தக ரீதியிலான விண்கலத்திற்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.
மாநிலச் செய்திகள்
யு.பி.எஸ்.சி அறிவிப்பு:
வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடக்கும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதுபவர்கள், சொந்த சானிடைசருடன் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி உரை:
புதிய கல்விக்கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு 21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
தமிழக அரசு அரசாணை வெளியீடு:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
56 சிஎன்ஜி நிலையங்கள்:
நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 56 சிஎன்ஜி நிலையங்களை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 'டெட்" தேர்வுக்கு வினாவங்கி தயார் செய்யும் பணிக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியலை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல்:
தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதிக்குப் பதிலாக, 20ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
6 மாவட்டங்களில் இன்று கனமழை:
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி:
மகாளய அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6ஆம் கட்ட அகழாய்வு:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் நேற்று பார்வையிட்டார்.
விளையாட்டுச் செய்திகள்
ஜான்டி ரோட்ஸ் நியமனம்:
ஸ்வீடன் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments: