Bright Zoom Today News
செப்டம்பர் 12 மாலை நேரச் செய்திகள்
நாளை நீட் தேர்வு.. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
வரும் திங்கட்கிழமை முதல் ஆய்வு:
தொடர் விபத்துக்களால் வானில் பறக்க தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கான பயிற்சியை, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம், லண்டனில் வரும் திங்கட்கிழமை முதல் ஆய்வு செய்ய உள்ளது.
ராட்சச விண்கல்:
பூமியை நோக்கி ராட்சச விண்கல் ஒன்று மணிக்கு 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இது செப்டம்பர் 14ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
முழுச் செயல்பாட்டிற்கு வந்தது:
டெல்லியில் முன் இருந்ததைப் போல அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் போக்குவரத்து முழுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியீடு:
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
பிரதமர் வீட்டு வசதி திட்டம்:
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
தேவஸ்தானம் வேண்டுகோள்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாணவர் சேர்க்கையை கண்காணிக்க குழு:
தமிழகத்தில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கையை கண்காணிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வீடியோ எடுக்க தடை:
விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
முதலமைச்சர் இரங்கல் தெரிவிப்பு:
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்பு:
நீலகிரி, வேலூர், திருவள்;ர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலியா அணி வெற்றி:
இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் டொமினிக் தீம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
No comments: