Bright Zoom Today News
செப்டம்பர் 14 காலை நேரச் செய்திகள்
பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - செய்திகள்...!!
உலகச் செய்திகள்
நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு:
விண்ணில் இருந்து மணிக்கு 24 ஆயிரம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ராட்சத விண்கல் பூமியை இன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மீது சீனா குற்றச்சாட்டு:
ராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்று அமெரிக்காவின் மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மாநிலச் செய்திகள்
மாநில அரசுகள் அறிவிப்பு:
ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கி கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்தை 13 மாநில அரசுகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை தெரிவிப்பு:
மனநல மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வருகின்ற 17ஆம் தேதி:
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா வருகின்ற 17ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.
முதல்-அமைச்சர் தெரிவிப்பு:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை:
தடையை மீறி சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இங்கிலாந்து அணி வெற்றி:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
No comments: