Bright Zoom Today News
செப்டம்பர் 15 காலை நேரச் செய்திகள்
கரையோர மக்களுக்கு... வெள்ள அபாய எச்சரிக்கை - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
புதிய தலைவர் தேர்வு:
ஜப்பானில் ஆளும் லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் புதிய பிரதமராக அவர் விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலச் செய்திகள்
மத்திய அரசு அதிரடி:
அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு தெரிவிப்பு:
ஜம்மு பகுதியில் நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3,186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு பாதுகாப்பு படை:
மத்திய தொழிலக பாதுகாப்பு படையை போல வாரண்ட் இல்லாமல் சோதனை செய்தல், கைது செய்தல் அதிகாரங்களுடன் உத்தரப்பிரதேசத்தில் புதிய பாதுகாப்பு படையை அந்த மாநில அரசு அமைக்கவுள்ளது. உத்தரப்பிரதேச சிறப்பு பாதுகாப்பு படை என அப்படைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியது:
பொதுத்துறை வங்கிகளுக்கு 20,000 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க, நாடாளுமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு கோரியுள்ளது.
இரண்டாவது முறையாக தேர்வு:
நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ஹரிவன்ஸ் நாராயண் சிங் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இறுதி செமஸ்டர் தேர்வுகள்:
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒரு மணி நேர தேர்வாக ஆன்லைனில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல்:
எம்.பி.க்கள் சம்பளத்தை ஓராண்டுக்கு குறைப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அரசின் முன் அனுமதி பெற வேண்டும்:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் தேர்வு நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு, அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை:
முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் 2020-21ஆம் கல்வியாண்டுகளில் சேர்வதற்கு, விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
வெள்ள அபாய எச்சரிக்கை:
கொசஸ்தலை ஆறு செல்லும் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருவள்ள ர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
உலக டென்னிஸ் தரவரிசை:
உலக டென்னிஸ் தரவரிசையில் நவோமி ஒசாகா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏடிபி பைனல்ஸ் தொடரில் விளையாட தகுதி:
யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலமாக ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் ஏடிபி பைனல்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
No comments: