Bright Zoom Today News
செப்டம்பர் 18 காலை நேரச் செய்திகள்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
செப்டம்பர் 24ஆம் தேதி:
செப்டம்பர் 24ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிப்பு:
சவூதி அரேபியாவில் 1 லட்சத்து 20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு:
வடகிழக்கு வங்க கடலில் வருகின்ற 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் தெரிவிப்பு:
சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 86 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் மன்ஷூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இன்று ஆலோசனை:
தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அதனை எதிர்கொள்ள, மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் காணொளி காட்சியின் மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ரயில்வே வாரிய தலைவர் தெரிவிப்பு:
மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
புதுவை பல்கலைக்கழகம் அனுமதி:
கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுவை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு:
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்று அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்:
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
18,000 கன அடியாக அதிகரிப்பு:
மேட்டூர் அணையில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக நீர் திறப்பு 15,000 கன அடியிலிருந்து 18,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
இந்தியன் பிரிமீயர் லீக் தொடங்குகிறது:
இந்தியாவின் முக்கிய விளையாட்டுத் திருவிழாவான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நாளை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
21 பேர் யு.ஏ.இ. விரைந்தனர்:
ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு அமீரகம் விரைந்துள்ளனர்.
No comments: