Bright Zoom Today News
செப்டம்பர் 19 காலை நேரச் செய்திகள்
தமிழகம் முழுவதும்... ரேஷன் கடைகள் இன்று செயல்படாது - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
நாளை முதல் தடை:
அமெரிக்காவில் சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்-ஐ நாளை முதல் பதிவிறக்கம் செய்ய, அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
வருடாந்திர பிரம்மோற்சவ விழா:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும்...:
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இன்று செயல்படாது என்று உணவுத் துறை அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை:
டெல்லியில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்:
தெலுங்கானாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு திட்டம்:
மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களை நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்து சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு:
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வை சமாளிக்க கூடுதலாக 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதன் மூலம், அத்திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி அறிவிப்பு:
பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு விருது:
சிறப்பான சிகிச்சை அளித்து வரும், சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பு விருது வழங்கப்பட உள்ளது.
இன்று முதல் அடையாள அட்டை அவசியம்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் அடையாள அட்டை அவசியம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
No comments: