Bright Zoom Today News
செப்டம்பர் 19 மாலை நேரச் செய்திகள்
இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பொதுமக்கள் உற்சாகம்:
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பனிப்பொழிவால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
மாநிலச் செய்திகள்
புதிய கல்விக்கொள்கையின் இலக்கு:
உயர்கல்வி செல்வோரின் விகிதத்தை 2035ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்துவதே புதிய கல்விக்கொள்கையின் இலக்கு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
வருகின்ற திங்கட்கிழமை முதல்:
தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை முதல் 3,501 நகரும் அம்மா ரேஷன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திவால் சட்டத்திருத்த மசோதா:
பெரு நிறுவனங்களின் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தற்காலிகமாக தடை செய்யும் நொடிப்பு மற்றும் திவால் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு பின்பு சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியீடு:
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் 754 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் தெரிவிப்பு:
புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செய்திகள்
25 துணை மின் நிலையங்கள் திறப்பு:
எரிசக்தித் துறையின் சார்பில் ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, சேலம், தஞ்சை, திருவள்;ர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடிக்கல் நாட்டினார்:
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி உள்ளிட்ட 3 திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிய செயலி அறிமுகம்:
சென்னை ரயில்வே கோட்டம் தனது வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்தவும், புதிய சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்தை ஈர்க்கும் வகையிலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதமாக ஃபிரைட் சேவா (சரக்கு போக்குவரத்து சேவை) எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ரசிகர்கள் ஆர்வம்:
ஏறத்தாழ 400 நாட்களுக்கு பிறகு டோனி, இன்று மீண்டும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார். டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்
No comments: