Bright Zoom Today News
செப்டம்பர் 22 மாலை நேரச் செய்திகள்
விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம்.. சென்னை பல்கலைக்கழகம் - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர்:
இந்தியாவில் முதல் பிரத்யேக ஆன்லைன் ஸ்டோரை ஆப்பிள் நிறுவனம் நாளை துவங்க உள்ளது.
மீண்டும் தொடங்கியது:
நேபாளத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நாசா அறிவிப்பு:
2024ஆம் ஆண்டில் நிலவுக்கு பெண் உட்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
அரியவகை தாவரங்களை சேகரிக்கும் பணி:
தைவானில் அழியும் நிலையில் உள்ள அரியவகை தாவரங்களை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலச் செய்திகள்
பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
வடக்கு சத்தீஸ்கர், அதையொட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம்:
இணையதள கோளாறு ஏற்பட்டால், மாணவர்கள் விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ளுpநநன pழளவ தவிர வேறு தனியார் கூரியர் மூலம் அனுப்பலாம் அல்லது கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் ஒப்படைக்கலாம் எனவும் கூறியுள்ளது.
தற்போதைக்கு சாத்தியமில்லை:
ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி முதல்:
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
பிரம்மோற்சவ விழாவின் 4ஆம் நாள்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4ஆம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளி காட்சியளித்தார்.
நாளை பிரதமர் மோடி ஆலோசனை:
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு:
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்... முதலமைச்சர்:
ராமநாதபுரத்தில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
No comments: