Bright Zoom today News
செப்டம்பர் 23 காலை நேரச் செய்திகள்
தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
கடல் மட்டம் உயரும்.. நாசா அறிவிப்பு:
2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ-க்கும் அதிகமான அளவிற்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருதரப்பும் ஒப்புதல்:
இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், எல்லைக்கு மேலும் படைகளை அனுப்பக்கூடாது என்று இருதரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
ஈரான் அறிவிப்பு:
அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது.
மருந்துகள் விலை விரைவில் உயரும் அபாயம்:
மருந்து தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை சீனா திடீரென உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகள் விலை விரைவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
இன்று பலத்த மழை பெய்யக்கூடும்:
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இன்று ஆலோசனை:
தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய அரசு திட்டம்:
காவிரி உட்பட நாட்டில் ஓடும் 5 முக்கிய நதிகளை தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
மும்பையில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா:
அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நேற்று நிறைவேறியது. இதன் மூலம் வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களில் இருந்து நீக்கப்படுகின்றன.
மாவட்டச் செய்திகள்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்:
ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரூ.14,000 கோடி செலவில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை:
அணைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்:
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகல்:
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பகுத்தாய்வு பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ உடல் நலக்குறைவு காரணமாக விலகி உள்ளார்.
No comments: