Bright Zoom Today News
செப்டம்பர் 23 மாலை நேரச் செய்திகள்
அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - முக்கியச் செய்திகள்..!!
உலகச் செய்திகள்
இருதரப்பு உச்சி மாநாடு:
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
உலகின் செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்கள் பட்டியல்:
டைம் பத்திரிக்கையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு:
மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விவரத்தை வருகின்ற 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல்:
கேரளாவில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளன என்றும், முதல்வர் பினராயி விஜயன் இந்த காய்கறிகளுக்கான குறைந்தபட்ச விலையை அறிவிப்பார் என்றும் அம்மாநில விவசாயத்துறை தெரிவித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகல்...:
டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாக அதன் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரியின் குடும்பம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் ஆலோசனை:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.
இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு:
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது.
தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்:
இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த அறிஞர்களையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மாவட்டச் செய்திகள்
விரைவில் புறநகர் ரயில் சேவை:
சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
No comments: