Bright Zoom Today News
செப்டம்பர் 24 காலை நேரச் செய்திகள்
மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம்.. காணொளியில் இன்று கருத்துக் கேட்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
சூழியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி:
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்ததால் சூழியல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநிலச் செய்திகள்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு:
இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதற்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
இன்று ஆன்லைன் கருத்துக் கேட்பு:
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்துக் கேட்கிறது. தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் காணொளியில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கவுள்ளது.
ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு:
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சியினர் சந்தித்து வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 2020-2021ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கை:
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கை கழுவுதலுக்குக்கூட வசதியில்லாத கழிப்பறைகளை கொண்ட பள்ளிகள் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு:
தமிழக கேடரில் புதியதாக தேர்வான 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை:
தமிழகத்திற்கு மருத்துவ உட்கட்டமைப்புக்காக ரூ.3,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டச் செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைவு:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று முதல் 4 நாட்களுக்கு நகைக்கடைகள் இயங்காது:
ராசிபுரத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நகைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மீண்டும் திறப்பு:
கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு சுற்றுலா தலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுவதாக உதவி ஆட்சியர் சிவகுரு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
No comments: