Bright Zoom Today News
செப்டம்பர் 24 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல்... பள்ளிகள் திறக்க அனுமதி - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
சீனாவின் முதல் பணக்காரர்... சோங் சான்சான்:
தண்ணீர் பாட்டில் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான், ஜேக்மா-வை முந்தி சீனாவின் பெரும் பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார்.
அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்ற முடியாது... டிரம்ப்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்ற முடியாது என்றும், நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்:
ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட் என்னும் பெயரை விமானப்படை பைலட்டான சிவாங்கி சிங் பெற உள்ளார்.
உள்நாட்டு விமான பயணிகளின் லக்கேஜ் கட்டுப்பாடுகள் நீக்கம்:
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, பயணிகளின் லக்கேஜ் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இன்று நீக்கி உள்ளது.
மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம்:
வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து பஞ்சாபில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல்:
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகள்:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் இன்று ஆன்லைன் முறையில் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழா:
கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
மீண்டும் 100 அடியை எட்ட உள்ளது:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட உள்ளது.
தங்கம் விலை குறைவு:
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,755-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் தொடர்:
13-வது ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-பெங்க;ர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.
No comments: