Bright Zoom Today News
செப்டம்பர் 25 காலை நேரச் செய்திகள்
வரும் 28ஆம் தேதி திறக்கப்படும்... தமிழக அரசு அறிவிப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும்:
நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் ஒரு லட்சத்து 10,000 அமெரிக்க டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாராட்டு தெரிவிப்பு:
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தியதில் இந்தியா சிறப்பாக பணியாற்றியதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
28ஆம் தேதி மாலை வெளியீடு:
மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் இன்று வெளியிடப்பட வேண்டிய பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற 28ஆம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஏற்க தயார்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் வழி கல்வி வழங்கும் பள்ளி தொடர்ந்து நடைபெற அனைத்து செலவையும் தமிழக அரசு ஏற்க தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
போக்குவரத்து மீண்டும் தொடங்கியது:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மழையின் தீவிரம் குறைந்ததால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தமிழக அரசு உத்தரவு:
நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே வாரியம் ஒப்புதல்:
தமிழகத்தில் ஏற்கனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், மேலும் மூன்று சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு:
பொறியியல் படிப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு, இணைய வழியில் நேற்று தொடங்கியது. இதில், 90 சதவீத மாணவர்கள் எந்தவித தொழில்நுட்ப சிக்கலும் இல்லாமல் நல்ல முறையில் தேர்வு எழுதினார்கள்.
முதல்வர் கோரிக்கை:
அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை சென்னையில் அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நடைபெறுகிறது:
காவிரி ஆணையக் கூட்டம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது.
மாவட்டச் செய்திகள்
தமிழக அரசு அறிவிப்பு:
தொடர்ந்து மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வரும் 28ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிப்பு:
கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது அகரம் பகுதியில் 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஐ.பி.எல் தொடர்:
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த டி20 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க;ர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
No comments: