Bright Zoom Today News செப்டம்பர் 25 மாலை நேரச் செய்திகள்

 


Bright Zoom Today News

செப்டம்பர் 25 மாலை நேரச் செய்திகள்

வருகின்ற 29ஆம் தேதி... தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை - செய்திகள்..!!

உலகச் செய்திகள்

அபராதம் விதிப்பு:

வாகன விற்பனை அளவை அதிகரித்துக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் பிஎம்டபிள்யூ (டீஆறு) நிறுவனத்திற்கு அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையம் 132 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இலங்கையில் ஜனவரி முதல்:

இலங்கையில் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றிற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 


மாநிலச் செய்திகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்:


உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார்.


இரண்டாம் நாளாகப் போராட்டம்:


வேளாண்துறையின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


வருகின்ற 29ஆம் தேதி:


வருகின்ற 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:


தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்:


தமிழகத்தில் பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து முதலமைச்சரே ஆய்வு நடத்தி இறுதி முடிவெடுப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ரயில்கள் ரத்து:


விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருவதால் வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


அடுத்த 24 மணி நேரத்தில்:


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


பீகாரில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு:


பீகாரில் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், 65 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 


மாவட்டச் செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்:


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. 


விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் டி20 தொடர்:


ஐ.பி.எல் டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 


 

Bright Zoom Today News செப்டம்பர் 25 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  செப்டம்பர் 25 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on September 25, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.