Bright Zoom Today News
செப்டம்பர் 26 காலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
உளவுத்துறை தெரிவிப்பு:
காஷ்மீரில் வன்முறையை அதிகரித்து இந்தியாவிற்கு தொல்லை கொடுக்குமாறு பாகிஸ்தானை, சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் உரை:
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது ஆண்டுக் கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் உரையாற்றுகிறார்.
மாநிலச் செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இன்று காலை 11 மணி முதல்:
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் இன்று காலை 11 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று கனமழை பெய்யக்கூடும்:
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டாயம்:
அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து கடைகளில் இனிப்பு பண்டங்களை சில்லறை விற்பனை செய்யும்போது காலாவதியாகும் தேதியைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தேதி அவசியமில்லை என்று உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பான குளுளுயுஐ தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
முக்கிய ஆலோசனை:
சென்னையில் வருகின்ற 28ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
பக்தர்களுக்கு அனுமதி கிடையாது:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் முக்கிய மூன்று நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
சிறந்த கால்பந்து வீரர் விருது:
இந்த ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும், சிறந்த வீராங்கனை விருதிற்கு சஞ்சுவும் இந்திய கால்பந்து சம்மேளனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்கவுள்ளது.
ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டம்:
ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
No comments: