TNPSC Group IV - Study Materials.!
பகுதி - அ
தமிழ் இலக்கணம்
உயிரளபெடை..!
Tamil grammar Uyiralapetai..!
Bright Zoom ,
உயிரளபெடை :
★ உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர்.
·
அளபெடுகும் எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு | அளபெடுத்த எழுத்து | அளபெடுத்துள்ள பாங்கு | குறிப்பு |
பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல், புகாஅர் (வினைமுற்று) , புகாஅர்த் தெய்வம் (ஊர், ஆஅய் (அரசன் | ஆஅ | பால் - பாஅல் | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில் | ஆஅஅ | கடா - கடாஅ, படா - படாஅஅ | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல | ஈஇ | குருவி - குரீஇ | சொல்லிசை அளபெடை |
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் | ஊஉ | உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம் | அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை |
பேஎம் முதிர், மன்றத்து | ஏஎ | பேம் - பேஎம் [12] | இன்னிசை அளபெடை |
இன்சொலால் ஈரம் அளைஇ | ஐஇ | அளவி - அளைஇ | சொல்லிசை அளபெடை |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி | ஓஒ | கோல் - கோஒல் | செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை |
- | ஔஉ | - | - |
அளபெடுக்கும் இடங்கள்
★ மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு:
1.ஓஒதல் வேண்டும் முதல்
2.கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3. நல்ல படாஅ பறை கடை
★ மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
★ ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
வகைகள் :
இதில்
◆ செய்யுளிசை அளபெடை,
◆ இன்னிசை அளபெடை,
◆ சொல்லிசை அளபெடை
என மூன்று வகைகள் உள்ளன.
அளபெடைப் பெயர்
◆ ஆடூஉ
◆ மகடூஉ
இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது.
தமிழ் இலக்கணம் உயிரளபெடை | Tamil grammar Uyiralapetai..!
Reviewed by Bright Zoom
on
April 03, 2022
Rating:

No comments: